2020.04.01 දින සිට 2020.04.30 දින දක්වා කුවේට් රජය විසින් පොදු සමා කාලයක් ප්රකාශයට පත් කර ඇති බව ඔබ දන්නවා. ශ්රී ලංකාව තුල කොරොනා වෛරසය පැතිරීම පාලනය කිරීම සඳහා කුවේට් ඇතුලු අනෙකුත් රටවල් සඳහා ගුවන් ගමන් තාවකාලිකව නවතා ඇති බවද ඔබ දැනටමත් දන්නවා.
අපගේ මුහුණු පොතේද පළ කර ඇති ජනාධිපති මාධ්ය ඒකකය 2020.03.27 දින නිකුත් කර ඇති මාධ්ය නිවේදනයෙන්ද මව්බිමට පැමිණීමට අපේක්ෂිත විදේශගත ශ්රී ලාංකිකයන්ගෙන් ඉල්ලා ඇත්තේ රටතුල කොරොනා වෛරසය මර්ධනය කරන තෙක් තමා වෙසෙන ස්ථානයේම සුරක්ෂිතව වෙසෙන ලෙසත්, ශ්රී ලංකාව තුල කොරොනා වෛරසය මර්ධනය කිරීමෙන් පසු මව්බිමට ගෙන්වා ගැනීම සලකා බලන බවත්ය.
කුවේට් රජය ප්රකාශයට පත්කර ඇති පොදු සමා කාලය පිළිබඳව තානාපති කාර්යාලය විසින් ශ්රී ලංකා රජය දැනුවත් කර ඇති අතර, ජනාධිපති මාධ්ය නිවේදනය මගින්ද දන්වා ඇති පරිදි, ශ්රී ලංකාව තුළ උද්ගතව ඇති තත්ත්වය පාලනය කිරීමෙන් අනතුරුව, ලංකා රජයෙන් ලැබෙන උපදෙස් පරිදි ඉදිරි ක්රියාමාර්ග ගැනීමට බලාපොරොත්තු වෙමු.
2020.03.28 දින තානාපති කාර්යාලය කුවේට් රජය සමඟ පැවැත්වූ සාකච්ඡාව අනුව, මෙම කටයුත්ත සම්බන්ධීකරණය කරගැනීම සඳහා තානාපති කාර්යාල භූමියෙන් පරිබාහිර පොදු ස්ථානයක් කුවේට් රජය මගින් නම් කිරීමට නියමිතය.
එම ස්ථානය පිළිබඳ තොරතුරු ලද වහාම තානාපති කාර්යාලයේ මුහුණු පොත හරහා ඔබ වෙත දැනුම් දීමට කටයුතු කරන අතර, මේ මොහොතේදී නිවෙස් තුලටම වී සිටීමට කුවේට් රජය විසින්ද උපදෙස් දී ඇති අතර, ඔබගේ වාසස්ථාන වලට වී සුරක්ෂිතව සිටින ලෙස ඉල්ලා සිටිමු.
තවද, අවශ්ය වුවහොත් පහත දුරකථන අංක සහ විද්යුත් තැපෑල ඔස්සේ තානාපති කාර්යාලය අමතන්න.
දුරකථන අංක - 65000118 / 97507875
විද්යුත් තැපෑල - slemb.kuwait@mfa.gov.lk
2020/04/01-2020/04/30 வரையிலான காலப்பகுதியை குவைத் அரசு பொது மன்னிப்பு காலப்பகுதியாக பிரகடனம் செய்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று . இலங்கை நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டப்படுத்தும் நோக்கில் குவைத் உட்பட பிற நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் இலங்கை அரசு தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள் .
கடந்த 2020/03/27 ம் திகதி ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவித்தலில் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வரையில் இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும் , இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிக்கையும் தூதுவராலயத்தின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது .
குவைத் அரசினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பொது மன்னிப்பு தொடர்பாக இலங்கை தூதரகத்தால் இலங்கை அரசுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் வழங்கப்படும் ஆலோசனைக்கேற்ப மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.ஆனால் மேலதிக நடவடிக்கை இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படுதலிலேயே தங்கியுள்ளது.
தூதுவராலயம் குவைத் அரசாங்கத்துடன் நடாத்திய நேற்றைய (2020/03/27)கூட்டத்தில் பொது மன்னிப்பு தொடர்பில் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக குவைத் அரசினால் பிறிதொரு இடம் தூதுவராலய வளாகத்துக்கு பதிலாக வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறும் போது உடனடியாக உங்களுக்கு அறியத்தரவுள்ளோம்.
எனவே , தூதுவராலயத்தினால் வழங்கப்படவுள்ள மேலதிக அறிவுருத்தலுக்காக காத்திருக்கும் படியும் , தற்போது நீங்கள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.இது தொடர்பில் மேலதிக விபரங்களறிய எமது முகப்புத்தக பக்கத்தினூடாக இணைந்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். (https://www.facebook.com/SriLankaEmbassyinKuwait/).
மேலதிக தேவைகளுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் :
65000118/97507875
Email: slemb.kuwait@mfa.gov.lk
65000118/97507875
Email: slemb.kuwait@mfa.gov.lk
0 Comments